Friday, June 28, 2013

திருக்குறளும் நாலடியாரும்

நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி’ , ‘பழகு தமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில்இந்த இரண்டு தொடர்களும் நாலடியாரின் பெருமையையும் திருக்குறளின் சிறப்பையும் நன்கு காட்டுவன. குறள் வெண்பாக்களால் ஆகிய நூலுக்குக் குறள்என்ற பெயர் ஏற்பட்டாற்போல, நாலடி வென்பாக்களாலாகிய இந்நூலிற்கும்  நாலடிஎனும் பெயர் அமைந்தது. ஆர்விகுதி சேர, அது நாலடியார் ஆயிற்று. நாலடியார், நாலடி நானூறு, வேளாண் வேதம் எனவெல்லாம் இதனைக் குறிப்பிடுவார்கள்.
திருக்குறள், கருத்துக்களைச் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கிறது. நாலடி, விளக்கமாகவும் இனிதாகவும் அனைவருக்கும் புலனாகுமாரும் எடுத்துச் சொல்லுகிறது. திருக்குறளின் விளக்கம் போல் இந்த நூல் போற்றப்பட வேண்டியதாகும். அதனைக் கற்பதற்கு முன் கற்கப்பட அடிப்படை நூலுமாகும். வடநாட்டிலே, ஒரு சமயம் பெரிய பஞ்சம் ஏற்பட்டது. சமண முனிவர்கள் எண்ணாயிரவர் பாண்டிய நாட்டைத் தஞ்சமாக வந்து அடைந்தனர். தமிழ் நாட்டிலேயே  தங்கிய அவர்கள் தம் உடலைப் பேணியதுடன், தமிழென்னும் அமுதையும் பருகித் தமிழ்ச் சான்றோராகவும் சிறந்தனர்.
 
உலகப் புகழ்பெற்ற தமிழ் இலக்கியங்களில் திருக்குறளே முதன்மையானதாகும். இதனை இயற்றிய திருவள்ளுவர் 1330 குறள்களை பத்து பத்தாக 133 அதிகாரங்களில் தொகுத்துள்ளார். இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூலாகும். அகவாழ்விலும் புறவாழ்விலும் மனிதன் இன்பமுடன் வாழ தேவைப்படுகின்ற அடிப்படை பண்புகளை விளக்கப்படுத்துவனவாக விளங்குகிறது. திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தார். அவர் இன்றுள்ள வாழ்க்கையை எவ்வாறு விளக்க முடியும் என்று வினவலாம். காலம் மாறினாலும் உண்மைகள் மாறுவதில்லை என்பதற்கு திருக்குறள் ஒரு சான்று. வள்ளுவரின் வாழ்க்கையின் அடிப்படையாகவும் பொதுவாகவும் உள்ள உண்மைகளைக் கண்டு எழுதியுள்ளமையால் பல்வேறு காலத்தவரும் நாட்டவரும் போற்ற முடிகின்றது. அவ்வாறு போற்றும்போது தம் காலத்திற்கேற்றவாறு அவற்றை உணர்கின்றனர்.
வடநாட்டுப் பஞ்சம் நீங்கியதும், அவர்தம் நாடு திரும்ப விரும்பவும், பாண்டியன் அவர்களைப் பிரிய மனமின்றி விடைகொடாது காலந்தாழ்த்தினான். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாடல் எழுதித் தம் காணிக்கையாகப் பாண்டியனுக்கும் தமிழுக்கும் வைத்து விட்டு யாரும் அறியாமலே தம் நாடு சென்று விட்டனர். செய்தியறிந்த பாண்டியன் பெரிதும் வருத்தம் அடைந்தான். அந்த ஏடுகளை வைகையிலே எறிய ஆணையிட்டான். அவற்றுள் வெள்ளத்தை எதிர்த்து வந்த ஏடுகள் 400. அவையே நாலடி நானூறாகத் தொகுக்கப் பெற்றன. போற்றிப் பேணப் பட்டன. இத்தகைய ஒப்பற்ற நூலுக்கு பால் இயல் அதைகாரம் முறைமையும், தக்கதோர் உரையையும் கண்டவர் பதுமனார்.
இவ்விரு நூல்களும் உயிர்கள் இப்படி பிறந்து இறந்து உழல்கின்ற காலத்து, அவைதம் உயிருக்கு உறுதியளிக்கும் நிலையான பேரின்பத்தை அடைய, அருள் செய்யும் பெருங்கருணையும் தலைமயும் உடையவனாக விளங்குபவன்பேரறிவுப் பொருளாகிய ஒருவனே! அவன் உள்ளான்என்பதை உணரவும், அவனுடைய அருளைப் பெறுவதற்கான நன்னெறிகளை அயராது ஈடுபடவும் கூடிய ஆற்றலுடையதும், இந்த மனித பிறவிதான். என்பதையறிந்து வாழ்க்கை வாழும் விதத்தைப் பற்றி மிகவும் துள்ளியமாக எடுத்துரைக்கிறது.  இந்நூல்கள் அறம், பொருள், இன்பம் என்ற வாழ்க்கைக்குத் தேவையான பால் முறை, அதிகார முறை இயல்முறை எனவெல்லாம் வகுத்து முறைப்படுத்தி, நூலின் பொருளினை விளக்குவதாக அமைந்த உரையாக வகுக்கப்படுகிறது.


No comments:

Post a Comment