Friday, June 13, 2014

தொல்காப்பியம் பயில்வோம் -2

நூன்மரபு : எழுத்துக்களின் வகை

சூத்திரம் 1 : எழுத்தெனப் படு(ப)வ
                        அகரமுதல் னகரஇறுவாய்
                        முப்பஃ தென்ப
                         சார்ந்துவரல் மரபின் மூன்றலங் கடையே .

பொருள்: அகரம் முதல் னகரமாகிய இறுதி வரை கொண்டிருக்கும் முதலெழுத்துகள் முப்பது என்கிறார் ஆசிரியர். சார்ந்து (சார்பு) வரும் எழுத்துக்களான குறுகிய ஒலியுடைய இ, உ, ஆய்த எழுத்தாகிய மூன்றும் அல்லாது வருவதே முதலெழுத்தாகிறது.
...
சூத்திரம் 2 : அவைதாம்
                         குற்றிய லிகரம் குற்றிய லுகரம்
                         ஆய்தம் என்ற
                         முப்பாற் புள்ளியும் எழுத்தோ ரன்ன .

பொருள் : மூன்று எழுத்துக்கள் இல்லாமல் முப்பது எழுத்துக்கள் தமிழின் முதல் எழுத்துக்கள் என்பதால் விடுப்பட்ட அம்மூன்றும் குற்றியல் இகரம் என்றும் குற்றியல் உகரம் என்றும் ஆய்த எழுத்து என்றும் இந்த நுற்பாவில் ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.
 ...
 
நூன்மரபு : மாத்திரை
 
சூத்திரம் 3 : அவைதாம்
                        அ,இ,உ,எ,ஒ என்னும்
                        அப்பால் ஐந்தும்
                        ஓர் அளவு இசைக்கும் குற்றெழுத்து என்ப .
 
பொருள் : அ,இ,உ,எ,ஒ  ஆகிய ஐந்து எழுத்துக்களும் ஒரு மாத்திரை ஒலிக்கும் குறில் எழுத்துகள் ஆகும்.
...
சூத்திரம் 4 : ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔ என்னும் 
                        அப்பால் ஏழும்
                        ஈர் அளவு இசைக்கும் நெட்டெழுத்து
                        என்ப.
 
பொருள் : ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔ ஆகிய ஏழு எழுத்துக்களும் இரண்டு மாத்திரை ஒலிக்கும் நெடில் எழுத்துகள் ஆகும்
...
சூத்திரம் 5: மூவள பிசைத்த லோரெழுத் தின்றே.
 
பொருள் : எழுத்துக்களுள் எந்தவொரு எழுத்தும் விகாரவகையானன்றி மூன்று மாத்திரை ஒலிக்காது என்கிறார் ஆசிரியர்.
 ...
 
தொடரும்



 
 

No comments:

Post a Comment