இப்பிரிவில் மாணவர்களுக்கு மொத்தம் நான்கு
சொற்கள் வழங்கப்பட்டிருக்கும். மாணவர்கள்
நான்கு சொற்களுக்கும் பொருள் விளங்க வாக்கியம் அமைக்க வேண்டும். ஒவ்வொரு
வாக்கியத்திற்கும் 2.5 புள்ளிகள்
வழங்கப்படும். மாணவர்களின் குறிப்புச் சொல் பயன்பாட்டிற்கேற்பவும் எழுத்துப்
பிழைகளுக்கேற்பவும் புள்ளிகள் வழங்கப்படும்.
அமைக்கப்படுகின்ற வாக்கியங்கள் தனி வாக்கியமாக
இருத்தலை மாணவர்கள் கவனத்தில் கொள்வது அவசியம். வாக்கிய அமைப்பிற்கு கட்டுப்பாடு இல்லை என்றாலும் சொற்களின்
எண்ணிக்கை 5 - 10 க்குள் இருப்பது நலம். (கடைநிலை மாணவர்கள் 5 சொற்களில் பொருள் விளங்க வாக்கியம் அமைத்தாலே
போதுமானது) மாணவர்கள் சொற்களோடு அடைகள், உருபுகள் அல்லது விகுதிகளை சேர்த்து வாக்கியம் அமைக்கலாம்.
1.
அடைகள் - பெயரடை
/ வினையடை
2.
உருபுகள் -
வேற்றுமை உருபுகள்
3.
விகுதிகள் -
திணை/ ஒருமை பன்மை
வாக்கியம்
அமைத்தல் பகுதியில் மாணவர்கள் கவனிக்க வேண்டிய
முக்கியக்
கூறுகள்:
1. கொடுக்கப்பட்ட சொல்லுக்கு அர்த்தம் கூறும்
வகையில் வாக்கியம் அமைக்கக்கூடாது.
2. தேவர்கள் / மாமனிதர்கள் பெயர்களைச்
சிறுமைப்படுத்தி வாக்கியம் எழுதக்கூடாது.
3. உவமை, மரபுத்தொடர், பழமொழி, குறள், செய்யுள், இலக்கியத்
தொடர்களை வாக்கியமாக எழுதக்கூடாது.
4. இனியத்தொடர்கள் / பாடல் வரிகளை எழுதக்கூடாது.
5. ஆகுபெயராக வந்து வேறு பொருளைக் குறிக்கும்
வாக்கியம் எழுதக்கூடாது.
6. இடப்பெயராக சிறப்புப் பெயராக எழுதக்கூடாது.
7. தொடர் அல்லது தொகைச் சொற்களாக மாற்றி
எழுதக்கூடாது.
8. நேர்மறையாக இருக்கும் சொல்லை எதிர்மறையாக மாற்றி
எழுதக்கூடாது.
9. கலவை வாக்கியமாக இருக்கக்கூடாது.
வாக்கியம் அமைத்தல் பகுதியில் மாணவர்கள் கவனிக்க வேண்டிய
முக்கியக் கூறுகள்:
ü
கொடுக்கப்பட்ட
சொல்லுக்கு அர்த்தம் கூறும் வகையில் வாக்கியம் அமைக்கக் கூடாது.
ü
தேவர்கள்
/ மாமனிதர்கள் பெயர்களைச் சிறுமைப்படுத்தி வாக்கியம் எழுதக்கூடாது.
ü
உவமை, மரபுத்தொடர்,
பழமொழி, குறள், செய்யுள், இலக்கியத்
தொடர்களை
வாக்கியமாக எழுதக்கூடாது.
ü
இனியத்தொடர்கள்
/பாடல் வரிகளை எழுதக்கூடாது.
ü
ஆகுபெயராக
வந்து வேறு பொருளைக் குறிக்கும் வாக்கியம் எழுதக்கூடாது.
ü
இடப்பெயராக
சிறப்புப் பெயராக எழுதக்கூடாது.
ü
தொடர்
அல்லது தொகைச் சொற்களாக மாற்றி எழுதக்கூடாது.
ü
நேர்மறையாக
இருக்கும் சொல்லை எதிர்மறையாக மாற்றி எழுதக் கூடாது.
ü
கலவை
வாக்கியமாக இருக்கக்கூடாது.
Posted many more essay you published pls for my studies
ReplyDelete