Thursday, February 23, 2023

மலேசிய SPM தமிழ் மொழி தாளில்...



மனிதர்கள் பிறந்தது முதல் இறக்கும் வரை தம் வாழ்வில் கேட்டுப் பேசியும் வரும் மொழியே தாய்மொழியாகும். ஒரு தாய் தன் குழந்தைக்குப் பாலூட்டும் பொழுதும் சீராட்டி பாராட்டும் பொழுதும் பேசும் மொழியாம் தாய்மொழி தாய்தான் வந்தாச்சி, தவழ்ந்தது சங்கத் தமிழ்ச் சுவைஎனக் குடும்ப விளக்கில் பாரதிதாசனும் பால்வாய்ப் பசுந்தமிழ் என ஆன்றோரும் பிள்ளைத் தமிழைச் சிறப்பித்தனர். இத்தகைய தமிழ்மொழியைப் பயிற்றுவிப்பதன் மூலம் நாம் நமது எண்ணங்களைப் பேச்சு மூலமாகவும், எழுத்து மூலமாகவும் வெளியிடுவதற்குத் தாய் மொழி சிறந்த கருவியாகும்.
மனம் , ஒழுக்கம் முதலிய பண்பாட்டு ஆளுமை சிறக்க தாய்மொழிக்கல்வி உதவுகிறது. குறிப்பாக நம் நாட்டில் தொடக்கப்பள்ளி மற்றும் இடைநிலைப்பள்ளியில் தமிழை ஒரு பாடமாகக் கற்கும் மாணவர்கள்  அப்பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ள இலக்கியக் கூறுகள் மற்றும் வகைகள் மனதை விரிவடையச் செய்வதோடு  இலக்கிய மாந்தர்களின் குறிக்கோள் வாழ்க்கை கற்பவர்தம் வாழ்க்கைக்கு வழிகாட்டியாய் அமைகிறது என்றே கூற வேண்டும். கற்பித்தலும் அதற்கு ஏற்றவாரே வழிச்செய்திருக்க வேண்டும்.
செய்யுள்களைக் கற்பிக்கக் புகும்போது ஒரே மாதிரியாகத் தொடங்காமல் அந்தந்த இலக்கியங்களுக்கு ஏற்ப பல்வேறு உத்திமுறைகளைப் பின்பற்றுதல் சாலச்சிறந்தது.

சமூகப் பின்னனி கூறுதல் : திருக்குறள், பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஔவையின் கொன்றை                             வேந்தன்.

இலக்கிய வகைகள் கூறித் தொடங்குதல் சிற்றிலக்கிய வகைகள்.

கருத்து விளக்க முறையில்
தொடங்குதல்                   : அறநெறி, நல்லொழுக்கம், வாய்மை 

கவிஞரின் வரலாறு
கூறித் தொடங்குதல்         : அதிவீரராம பாண்டியன்,  (வெற்றி வேற்கை)   குமரகுருபர சுவாமிகள், (நீதிநெறி விளக்கம்)
                                சிவப்பிரகாச சுவாமிகள், (நன்னெறி)

தமிழ்மொழிக் கல்வி வாழ்க்கை நடத்தத் தேவையான திறன்களைப் பெற்றுத் தரும் கல்வி முறையாகும். கல்விப் பணிகளை உலகத்திற்குப் பயன்படுவனவாகச் செய்வதோடு நற்பண்புகலையும் தருகிறதுஎன்பார் யாக்ஞவகியார்.  மனிதனுடைய தனித்தன்மையையும் பூரணத்தை வெளிப்படுத்துவதே கல்வி என்பார் சுவாமி விவேகானந்தர். ஜி.கே.செஸ்டர்டன் மொழியை வாயிலாகக் கொண்டு படைக்கப்பெறும் கலையே இலக்கியம். ஒரு மனிதன் என்ன நினைக்கிறானோ அதை அழகுற வெளிப்படுத்தும் மொழியியலாகிய கலை இலக்கியம்என்கிறார்.
இலக்கியம் படைக்கப்படுவதற்கு உந்துதல் சக்தியாக அமையும் துடிப்புகள் பல. அவை மனித வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டவை. மனித வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டுபவை. பொதுவாகவே மனிதன் ஒன்றின் அழகையும் வடிவத்தையும் அனுபவித்த பின் வாளாவிருப்பதில்லை. தான் அனுபவித்ததைப் பற்றிய அனுபவங்களைப் பிறருக்குக் கூற விழைவான்; பிறருக்குச் சொல்லி மகிழ்வான். தன் உணர்வுகளைக் கலையாற்றலுடன் சொல்ல முற்படுபவர்களே நல்ல இலக்கிய படைப்பாளிகள் ஆகிறார்கள். ஏனெனில் உணர்ச்சிகளுக்கு வடிவம் கொடுப்பதே இலக்கியம்
நமது நாட்டில் தமிழ்மொழி பாடத்திட்டத்தை பொருத்த வரையில் இலக்கியம் எனப்படுவது தொடக்கப்பள்ளியிலும் இடைநிலைப்பள்ளியிலும் மொழிப்பாடத்தோடு இயைந்து கற்பிக்க கூடியதாகவே அமைந்திருக்கிறது. 

No comments:

Post a Comment